Thursday, October 8, 2009

Navarathri 2009 - Tirupathi Ula and Brahmmotsavam - Part 1

Every year, I choose a theme for the Navarathri Kolu and this time it was Tirupathi Ula and Brahmmotsavam, to coincide with the Brahmmotsavam happening at Tirupathi around the same time.

First comes the traditional Kolu on the steps (படி). Here are two photos of the same:






























THEME INTRODUCTION:

இறைவனை உணர மனதிலும் செயலிலும் மேன்மையான ஞானம் அவசியம். இப்பூவுலகில் உதித்த மனிதர்க்கெல்லாம் இறைவனை நெருக்கத்தில் கொண்டு தர ஆன்றோர்கள் ஆலயங்கள் அமைத்தனர். அப்படியொரு புனிதத் தலம் திருமலை. பாலாஜி என்றும் வேங்கடாசலபதி என்றும் எல்லோராலும் அன்போடு அழைக்கப் படுகிறான் கோவிந்தன்.

திருமகள் வாழும் மலை என்ற காரணத்தால் திருமலை என்று இந்த மலைக்கு பெயர். தல புராணங்களில் திருமலை ஆதி சேஷன் அம்சம் எனக் கூறப் பட்டுள்ளது.

இடந்தது பூமி; எடுத்தது குன்றம்;
கடந்தது கஞ்சனை, முன் அஞ்ச;கிடந்ததுவும்
நீர் ஓத மா கடலே; நின்றதுவும் வேங்கடமே
பேர் ஓத வண்ணர் பெரிது. (பொய்கையாழ்வார்)

பூமாதேவியை காக்கும் பொருட்டு வராக அவதாரம் எடுத்து நிலத்தை தோண்டியவனும்,ஆனிரைகளையும் அபயமென அவன் முகம் பார்த்த மக்களையும் பெரும் மழையிலிருந்து காக்க கோவர்த்தன மலையை குடையாய் எடுத்தவனும்,அகிலமே அஞ்சிய கம்சன் எனும் அரக்கனை வதைத்துக் கொன்றவனுமான திருமால் பள்ளி கொண்டிருப்பதென்னவோ பாற்கடலில். ஆனால் அகிலத்து மக்கள் எல்லோரும் எக்காலத்திலும் அந்த அழகனைக் கண்டு ரசித்து,அனுபவித்து,அடிபணிந்து வணங்கி அருள் பெற வேண்டுமென்பதற்காக அவன் நின்றதுவோ திருவேங்கட மலையில்.

க்ருஷ்ணாவதாரத்திற்க்கு முடிவு வந்தது. சுயம்புவாக சுவாமி திருவேங்கட மலையில் அவதரித்தான். அன்றிலிருந்து ப்ரம்மதேவன் தன் பரிவாரங்களுடன் வந்து அந்த கல்லுருவக் கடவுளை வணங்கி வழிபட்டு ஆராதனை செய்யத் தொடங்கினான். இப்படியாக கல்லுருவமாக காட்சி அளிக்க தொடங்கியதை மஹாபாரதம் விளக்குகிறது.

திருமலை வேங்கடாசலபதியின் வரலாறு, அந்த மலையப்பனுக்கு நாளும் நாளும் நிகழும் வைபவங்கள்,யுகம் யுகமாக அவன் சேவையில் ஆழ்ந்திருக்கும் புண்ணிய தீர்த்தங்கள் அவன் கோயில் நோக்கி செல்லும் வழியில் ஆங்காங்கே ஆலயங்களில்குடி கொண்டு நம்மை வரவேற்று வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் மற்ற தெய்வங்கள் என அனைத்தையும் அணு அணுவாக ரசித்து அள்ளிப் பருகுவதே இந்த புனித கொலு பயணத்தின் நோக்கம்.

இத் திருமலையில் வைகுண்ட வாசனான ஸ்ரீநிவாச பெருமாள் மிகவும் விருப்பங்கொண்டு அவதார ரூபத்தில் எழுந்தருளி கலியுகம் முடியும்வரை பக்தர்களின் குறை தீர்க்க இங்கேயே வசித்து வருகிறாரென்றும் அதன் காரணமாகவே முப்பத்து முக்கோடி தேவர்களும்,சகல ரிஷிகளும் இத் திருமலைமேல் வந்து எம்பெருமானை துதித்த வண்ணம் வாழ்ந்து வருகின்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன.

(Nobility in thought and action is needed, for one to be able to realize the presence of the Almighty. In order to facilitate this, and for people to be able to relate themselves with the Supreme Being, our ancestors built sacred temples. One such famous temple is Tirumala, the abode of Venkatesa. Govinda is also known as Balaji or Venkatachalapati. Since this is the abode of Tirumagal or Lakshmi, this temple is called Tirumala. According to the Puranas, Tirumala is said to be a facet of Adisesha.
As a saviour of Bhumadevi in his Varaha Avatara and as a saviour of the cowherds by carrying the Govardhana Mountain, Govinda's abode is Tiruppaarkadal or Vaikuntam. But,to enable devotees to come to His temple and have His Darshan,the Lord chose Tirumala-Tirupati to be his abode.
As the Krishnaavatara ended, the Lord came to reside at Tirupati in thestone form. Brahma,along with his family, came to the hills to worship the Lord.

This year's Kolu highlights the story behind Tirumala, details about the different deities present on the seven hills as one takes the road uphill, the annual Brahmmotsavam festival and the daily Sevas that are carried out at the temple.)


திருமலை தோன்றிய வரலாறு:
(The Story behind Tirumala:)


கலியின் கொடுமை குறைத்து உலக நன்மைக்காக காஷ்யப மஹரிஷியின் தலைமையில் ஒரு பெரிய யாகம் நடத்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த நாரதர் இந்த மஹா யக்ஞத்தின் பயனை எந்த மூர்த்திக்கு அளிக்க போகிறீர்கள் என்று கேட்க அவர்களும் ப்ரம்மா,விஷ்ணு,ருத்ரன் என்ற மும்மூர்த்திகளுக்கே என்று கூற,அதற்கு நாரதர் அம்மூவரில் மிகவும் பொறுமையானவர்க்கே அப்பலன் போய் சேர வேண்டும் என்று கூறினார். இதனை ஆராய முனிவர்களும் ப்ருகு முனிவரை அனுப்பினர்.

முதலில் ப்ருகு முனிவர் சத்ய லோகத்திற்க்கு வந்தார். அங்கு ப்ரம்மன் சரஸ்வதி தேவியுடன் கொலு வீற்றிருந்தார். முனிவரை லட்சியம் செய்யவில்லை. கோபமுற்ற முனிவர்,'உனக்கு பூலோகத்தில் பூஜை இருக்காது,கோயில்களும் இருக்காது' என்று சாபமிட்டார்.

(In the Kaliyuga, for world peace, a yagna was conducted by Sage Kaashyapa.Narada came there and asked who should get the benefit of the Yagna- Brahma,Vishnu or Shiva. To decide this, Sage Bruhu decided to visit each one of them and decide about the same. When he first visited Brahma, Brahma was immersed in conversation with Saraswathi,thus not noticing the sage. Getting furious,the sage cursed Brahma that he will never have temples in Bhuloka.)
















பின் கைலாயம் வந்தார். சிவன் உமையவளோடு தனித்திருக்கும் வேளையிலே உள்ளே நுழைந்த ப்ருகு முனிவர் மீது சிவன் தன் சூலாயுதத்தை ஏவினார். சிவனும் பொருமைசாலி இல்லை என்றுணர்ந்த முனிவர் வைகுண்டத்திற்கு வந்தார். அங்கு மஹாவிஷ்ணுவும் அவரை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. கோபமுண்ட ப்ருகு முனிவர் திருமாலின் நெஞ்சில் எட்டி உதைக்க, திருமால் முனிவரின் பாதத்தை நீவி விட, தன் தவறை உணர்ந்த ப்ருகு முனிவர் கண்களில் கண்ணீர் பெருகியது. விஷ்ணுவே பொறுமைசாலி என்று தீர்மானித்தார்.

தான் வாசம் செய்யும் பெருமானது மார்பினை உதைத்ததை பொறுக்க முடியாத மகாலக்ஷ்மி வைகுண்டத்தை விட்டு விலகி பூவுலகித்திற்கு வந்து தவம் செய்து வரலாயினர்.

ஊன் உறக்கமில்லாமல் பத்தினியைத் தேடி திருவேங்கடத்து ஏழுமலைகளில் நாராயணகிரி வந்தடைந்து ஒரு பாம்பு புற்றினுள் சென்று கண்மூடி காலங் கழிக்கலானார்.

(Next on reaching Mount Kailash to test Lord Shiva, Sage Bruhu cursed Shiva too, since Lord Shiva raised his weapon against the Sage for having disturbed him and Parvathi.
Dejected, the sage proceeded to Vaikunta. Again on being neglected by the Lord, Sage Bruhu kicked the Lord on the chest. Immediately,the Lord held the sage's foot and rubbed the tired foot. The sage instantly realized his folly,asked for forgiveness and decided that Lord Vishnu was the one among the three, to whom the fruits of the Yagna should goto. Witnessing all this happen, Lakshmi got furious that the sage had kicked the Lord's chest, which was her abode. She immediately left the Lord and went to a place called kollApuram in Bhuloka to do penance.
Lord Vishnu was heart-broken that Lakshmi had left Him and he thus went far and wide,in search of her.
He finally reached Narayanagiri(which is on the seven Hills of Tirumala) and remained under a snake-hole. He remained there for months together,without food and water.)



















நாரதர் ப்ரம்ம லோகம் சென்று ப்ரம்மதேவனிடம் 'தாமோதரன் ஆதிசேஷன் புற்றில் உணர்வின்றி கிடக்கிறார்,திருமகளோ கொல்லாபுரத்தில் த்யானத்தில் இருக்கிறாள், தாங்கள் சென்று நாராயணனுக்கு அமுது அளிக்க வேண்டும் ' என்றார். ப்ரம்மாவும், பரமேச்வரனும் இம்மை உலகை அடைந்து திருமகளிடம் விவரம் கூறி, ப்ரம்மன் பசுவாகவும், சிவன் கன்றாகவும், இலக்குமி எஜமானியாகவும் மாறி சோழ அரசனிடம் கன்றையும் பசுவையும் விற்றபின் இலக்குமி கொல்லாபுரம் திரும்பினாள்.

அரசன் இடையர் தலைவனை அழைத்து மற்ற பசுக்களோடு மேய்ப்பதற்க்கு அனுப்பினார். அந்த தெய்வபசு மாதவன் மறைந்திருந்த புற்றின் மேல் நின்று பாலை பொழிந்தது. அரண்மனையில் பசு பால் கறக்காததை கேள்வியுற்ற அரசன் பசுமேய்ப்போனிடம் விவரம் அறியச் சொல்ல,பாம்பு புற்றருகே சென்ற இடையன் காரணத்தை உணர்ந்து கோபமுற்று பசுவை வெட்ட போக அந்த கோடாளி எம்பெருமான் தலையில் பட்டு ரத்தம் சிந்த ஆரம்பிக்க,அங்கே வந்த அரசர் தன் தவரை உணர்ந்தான். எம்பெருமான் வெளிபட்டு 'நீ ஆகாச ராஜன் என்னும் மன்னனாகத் திகழ்வாய், அப்போது திருமகளே உனக்கு மகளாக வாய்த்து வளர யாம் வந்து மணம் புரிவோம்' என்று கூறினார்.

பின் இறைவன் சேஷாத்ரியில் அமைந்த ஆசிரமத்தை அடைந்து, வகுளமாலிகை (பூர்வ ஜன்மத்தில் யசோதை) ஸ்ரீனிவாசனை அருமையாக வளர்த்து வர, ஒரு நாள் ஸ்ரீநிவாசன் வேட்டைக்கு செல்லும்போது பத்மாவதியைக் கண்டு தன் வளர்ப்பு தாயிடம் கூற வகுளமாலிகையும் ஆகாச ராஜனிடம் சென்று மணம் பேசினாள்.

திருமகள் விலகிப் போயிருந்ததால் ஏழையாக நின்ற இறைவன் திருமணச் செலவுக்கென குபேரனிடம் பத்ரம் எழுதிக் கொடுத்து கடன் வாங்கினான்.

(Narada went to Brahma and asked him to save Lord Vishnu,who was still under the snake hole at Narayanagiri. Brahma came as a cow,Lord Shiva as a calf and Lakshmi as the cowherdess. Lakshmi handed over the cow and calf to the Chola King and went back to kollApuram. The cow stopped giving milk to the king and instead was serving Lord Vishnu daily. On learning this, the king got furious and ordered his men to kill the cow. The king's weapon touched the Lord instead. The king realized his folly and begged for forgiveness. The Lord said that the king would be born as akAsharAja and that Padmavathi would be his daughter. Accordingly,he said he would come as Srinivasa and wed Padmavathi.
Later on,in Seshadri, when the Lord sees Padmavathi,he weds her and since Lakshmi is not with him, he takes a loan from KuberA for the wedding.)


ஸ்ரீநிவாச கல்யாணம்:
Srinivasa Kalyanam:
















எண் திசை மலைகளும் குலுங்க, கடலும் மேகமும் கலங்க, இசை முழங்க, மலைமகள், கலைமகள் இருபுறம் நிற்க, இந்திராணி குடைப் பிடிக்க, சோபனம் பாட, தேவர்கள் மலர் மாரி பொழிய,திருமண விழா சிறப்பாக நிகழ்ந்தது. கலக நாரதர் கொல்லாபுரம் சென்று திருமகளிடம் விவரம் கூற கோபமுற்ற திருமகள் சேஷாத்ரி வந்து சேர்ந்தாள். ராமாவதாரத்தில் வேதவதியாகிய இந்த பத்மாவதியை ராமனோடு இணைக்க துடித்தபோது ஏக பத்தினி விரதனான ராமன் மணக்க இயலவில்லை. வேதவதியே பத்மாவதியாவாள். இந்த மங்கையை மணந்த வைகுந்தவாசன் ஸ்ரீநிவாசன் என்ற திருநாமத்தோடு லக்ஷ்மி,பத்மாவதி (ஸ்ரீதேவி,பூதேவி) சமேதராக திருமலையில் ஆனந்த நிலயத்தில் எழுந்தருளியதாக வரலாறு.

(Srinivasa-Padmavathi Kalyanam takes place in a grand fashion. Lakshmi, on hearing about this,gets furious and returns from kollApuram. The Lord thus resides along with Lakshmi and Padmavathi(Sridevi and Bhudevi) at Tirumala.)


திருவேங்கடமுடையான் திருக்கல்யாண காட்சி:

The Divine Wedding Scene:


தாரை வார்க்கப்படும் நேரத்தில் பத்மாவதி ஸ்ரீநிவாசனை பாராமல் வெட்கத்துடன் தலைகுனிந்து இருக்கிறாள். இந்த பெண் இவ்வளவு வினயமாக இருக்கிறாளே என்று வந்தவர்களோ வியக்க பத்மாவதியின் அனுபவமே அனுபவம். அவள் அணிந்த ரத்னமாலையின் நடுவிலே ஸ்ரீநிவாசனுடைய திருமுக மண்டலம் தெரிந்ததாம். அந்த பிம்பத்தயே தலைநிமிராமல் பார்த்தாளாம்.

(At the wedding, people were amazed to see Padmavathi's head bowed down all the time,thinking it was in reverence. But, the reason was something very different ! It seems she could see the reflection of the Lord in her chain,hence she didn't take her eyes off Him and was looking at her chain all the time,with her head bowed down !)

இராமானுஜர்:
Raamaanujar:

அந்த காலத்தில் திருமலைப் பெருமாள் ஸ்ரீவிஷ்ணுதான் என்று நிலை நிறுத்தியவர் ஸ்ரீமத் இராமானுஜர். திருவேங்கடத்திலிருந்த திருப்பதி தெய்வத்தை சங்காழி தரிக்கச் செய்தது, இராமானுஜர் செய்த முக்கிய வரலாற்றுச் செய்தியாகும்.

(It is believed that Raamaanujar was the chief person in deciding that Tirumala would be the residing place for Lord Vishnu.)

















(To be continued...)

6 comments:

Pushkala said...

Absolutely stunning arrangement of theme and fabulous Kolu! Great writeup too.

Gayathri Girish said...

Hi,
Thanks:-)
Am still typing out the write-up for Part 3,which describes the Brahmmotsavam sEvais in detail:-).Will post it today.

Anonymous said...

Hey,

No wonder people are awarding best decorated golu. Effort itself deserve awards.

Keep up.

HariOm

gksharma

Priya Ram said...

Beautiful Kolu ! i dont know to read tamil so cannot read anything Gayathri. Anyway, great effort from u to explain in detail. keep it up !

Priya Ram said...

Hi Gayathri,


Was wondering what u do with the thematic dolls after Navarathri as next year will be a different theme. And the english translation is enlightening. looking forward to read more.

Gayathri Girish said...

Hi Priya,

Actually I have written about this point in my last year's post about Navarathri-I just now saw it. Its dated October 20,2008.

Actually,our creativity lies in trying to use the same dolls every year,in different contexts.We can't keep buying dolls every year for each theme.

For instance, this year,not all dolls are new. I have mixed and matched from various other sets.

When I use some of this year's dolls in my next year's theme, I will tell you which ones I have used where :-)

Gayathri