Friday, October 9, 2009

Navarathri 2009 - Tirupathi Ula and Brahmmotsavam - Part 3

திருப்பதி ப்ரம்மோத்ஸவம்:

Tirupathi brahmmOtsavam:




திருப்பதியில் ப்ரம்மோத்ஸவம் விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது. இந்த உத்ஸவம் 9 நாட்களுக்கு நடைபெறும். ப்ரம்மா முதன் முதலில் இந்த உத்ஸவத்தை ஆரம்பித்து தானே முன் வந்து நடத்தியதால் இதற்கு ப்ரம்மோத்ஸவம் என்று பெயர். இது September/October மாதங்களில் சூரியன் கன்யா ராசியில் நுழையும் பொழுது நடைபெறும்.
(The brahmmOtsavam at Tirumala-Tirupathi is celebrated in a grand manner every year during September/October, for a period of nine days.Since this Utsavam is said to have been started by Brahma, it is called brahmmOtsavam.)




சகல வாத்யங்கள் முழங்க, குடைகள் நிழல் செய்ய, சாமரங்கள் வீச, மாதர்கள் நாட்டியம் ஆட, சங்கீத கோஷம் முழங்க, வித்வான்கள் கவிதைகளைப் பாடித் துதிக்க, வேதங்கள் முழங்க, அன்னம், சிங்கம், ஆஞ்சனேயர், ஆதிசேஷன், கருடன், யானை முதலிய வாகனங்களில் பகவானை எழுந்தருளச் செய்து நாள்தோறும் திருவிழா நடக்கும். இந்த உத்ஸவத்தை காண்பவர்களுக்கு வைகுண்ட அனுபவம் கிடைக்கிறது. 5வது நாளும், 9வது நாளும் கருட சேவை, ரதோத்ஸவம் நடைபெறும்.

(With all pomp and grandeur, the Lord goes on different vAhanAs, like on the lion,horse,elephant,hanumAn,garudA etc,on these nine days.On the 5th day is the garuda sEva and on the 9th day is the rathOtsavam.)


சக்கரத்தாழ்வார்:

chakkarathAlwAr:

ஆண்டவன் அபிஷேகத்திற்க்கு உபயோகப்படும் தீர்த்தத்தை ஸ்ரீ சக்கரத்தாழ்வார் வருடத்துக்கு ஒருநாள் புறப்பாடாக வந்து நீரில் நீராடி புனிதப் படுத்திச் செல்வார் என்பது ஐதீகம். இந்த தீர்த்தத்திற்கு ஸ்ரீ சக்ர தீர்த்தம் என்று பெயர்.

(Sri chakkarathAlwAr is said to purify the water in the tank by bathing there. Then this water is used for abhishEkam to the Lord on the nine days during the Utsavam.This teertham is called Sri chakra teertham.)


ப்ரம்மோத்ஸவம் ஆரம்பிப்பதற்கு முன் ஆகம விதிப்படி ஆலய சுத்தி செய்வார்கள், பின்பு கோவிலிலும், அதனை சுற்றியுள்ள இடங்களிலும் பூக்களாலும், மாவிலை தோரணங்களாலும் நன்கு அலங்காரம் செய்வார்கள்.
(It is customary to thoroughly clean the temple premises and decorate the temple with flowers and mango leaf tOraNams before the brahmmOtsavam starts.)

ம்ருத்ஸங்க்ரஹணம்: முதல் நாளன்று பூமாதேவியை வேண்டிக்கொண்டு சிறிது மண் எடுத்துப் பரப்பி ஒண்பது வித தானியங்களை விதைப்பார்கள். இதற்கு அங்குரார்பணம் என்று பெயர்.

(mruthsangrahaNam: On the first day, after praying to bhUmAdevi,seeds of 9 varieties of grains are sown.This is called ankurArpaNam.)


த்வஜாரோஹணம்:
dwajArOhaNam:

கருடன் போட்ட கொடியை வேத கோஷங்களுடன் கோவில் நிர்வாகிகள் ஏற்றுவார்கள். அதற்கு பின் வாஹன சேவை நடைபெறும். இறைவன் ஊர்வலமாக வீதி உலா வருவார்.

(The flag put by Garuda is hoisted by the temple authorities,to mark the beginning of the utsavam.Then the Lord comes on different vAhanAs on each day.)


முதல் நாள்:
First day:

த்வஜாரோஹணம் கோயிலுக்கு அருகில் நடைபெரும்.
(The flag is hoisted - dwaja ArOhaNam.)







இறைவன் இரவில் பெரிய சேஷ வாஹனத்தில் ஊர்வலம் வருவார்.
(In the night,the Lord comes on the big sEsha vAhanam.)









இரண்டாம் நாள்:
Second day:

காலையில் சின்ன சேஷ வாஹனத்தில் ஊர்வலம் வருவார்.
(In the morning,the Lord comes on the small sEsha vAhanam.)










இரவில் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடைபெறும்.
(In the night, Unjal sEvai takes place in the Unjal mantapam.)






மூன்றாம் நாள்:
Third day:

காலையில் இறைவன் சிம்ம வாஹனத்தில் ஊர்வலம் வருவார். இரவில் முத்யால பன்றி வாஹனம் முத்துகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும்.

(In the morning, the Lord comes on the lion vAhanA. In the night,the Lord comes on the muthyAla panri vAhana.)


நாலாவது நாள்:
Fourth day:








காலையில் கல்பவ்ருக்ஷ வாஹனத்தில் ஊர்வலம்.
இரவில் ஊஞ்சல் சேவை.

(Kalpavruksha vAhanam in the morning;Unjal sEvai in the night.)






ஐந்தாவது நாள்:
Fifth day:









இது முக்யமான நாளாகும். இறைவன் மோஹினி அவதாரத்தில் கருட வாஹனத்தில் ஊர்வலம் வருவார்.

(The Lord comes in the mOhini avatAram, on the garuda vAhanam.)




ஆறாவது நாள்:
Sixth day:









காலையில் ஹனுமத் வாஹன ஊர்வலம், வஸந்தோத்ஸவம் நடக்கும்.
இரவு கஜ வாஹனத்தில் ஊர்வலம்.

(Hanumath vAhanam and vasantOtsavam in the morning, gaja vAhanam in the night.)



ஏழாவது நாள்:
Seventh day:







காலையில் சூர்யப்ரப வாஹனம், இரவில் ஊஞ்சல் சேவைக்கு பிறகு இறைவன் சந்த்ரப்ரப வாஹனத்தில் ஊர்வலம் வருவார்.

(sUryaprabha vAhanam in the morning, Unjal sEvai and the Lord on chandraprabha vAhanam in the night.)





எட்டாவது நாள்:
Eighth day:








இதுவும் முக்ய நாளாகும். இறைவன் ரதத்தில் ஊர்வலம் வருவார். இந்த உத்ஸவத்தை தரிசிப்பவர்களுக்கு மோக்ஷம் கிடைக்கும் என்று ஐதீகம்.

(The Lord comes on a chariot.It is believed that devotees who witness this sEva get mOkshA.)









இரவில் அச்வ வாஹனத்தில் ஊர்வலம்.

(Horse vAhanam in the night.)







ஒண்பதாவது நாள்:
Ninth day:

சக்ராஸன மஹோத்ஸவம்:
ChakrAsana mahOtsavam:










இறைவனுக்கு எண்ணெய், மஞ்சள் அபிஷேகம் செய்வார்கள். த்வஜவரோஹணம் நடைபெறும். கொடியை இறக்குவார்கள். அதனுடன் ப்ரம்மோத்ஸவம் முடிவு அடைகிறது.

(Oil and turmeric abhishEkam is done for the Lord.The flag is brought down (dwaja avarOhaNam) to signal the end of the brahmmOtsavam.)



(To be continued...)

4 comments:

Revanth said...

Could not read what you wrote, But still the koluvu of toys was superb!! simply wonderful :)

Gayathri Girish said...

To Revanth and Priya:

I will do a brief English translation of the entire theme soon..

Gayathri

Priya Ram said...

Looking forward to english translation. thanks.

Revanth said...

thanks a lot Mrs.Girish :)