காலையிலிருந்து இரவு வரை பெருமாளுக்கு நடக்கும் சேவைகள்:
sEvAs that are done for the Lord from morning to night:
1. சுப்ரபாத தரிசனம்:
1.suprabhAta darisanam:
சந்நிதிக்குள் விளக்கையெல்லாம் ஏற்றுவார்கள். சுப்ரபாதம் பாடி முடித்ததும் கதவை திறப்பார்கள். இது தான் சுப்ரபாத தரிசனம். விச்வரூப தரிசனம் என்றும் சொல்வார்கள்.
(Lamps are lit inside the sanctum-sanctorum. After reciting the suprabhAtam, the doors are opened.This is called the suprabhAta darisanam or vishvarUpa darisanam.)
2. அபிஷேகம்:
2.abhishEkam:
போக ஸ்ரீனிவாஸருக்கு (உத்ஸவருக்கு) அபிஷேகம் செய்வார்கள். அதற்கு பிறகு மஞ்சள் கலந்த தண்ணீர், பசும்பால், சந்தனம், தேன் என்று வரிசையாக அபிஷேகம் நடக்கும்.
(AbhishEkam for bhOga srInivAsar (the utsavar deity)is done. Then,abhishEkam with turmeric water,milk,chandan,honey etc is done.)
3. தோமாலா சேவை:
3.tOmAlA sEva:
தோள் மாலை, மற்றும் பூலாங்கி, வேங்கடாசலபதிக்கு சாத்திய பூக்களை பூ கிணற்றில் போடுவார்கள்.
(Flowers offered to the deity are put inside the "flower-tank".)
4. கொலுவு தர்பார்:
4.goluvu darbAr:
கொலுவு மண்டபத்தில் அமர்ந்து முதல் நாள் உண்டியல் பணம், தங்கம், வெள்ளி கணக்கு பார்ப்பார்கள். பக்தர்களுக்கு இந்த தரிசனம் கிடையாது.
(Inside the goluvu mantapam, the amount of money,gold,silver inside the Hundi is counted daily. This place is not open for public.)
5. அர்ச்சனை சேவை:
5. archanA sEva:
சஹஸ்ர நாம அர்ச்சனையின்போது 20 நிமிடம் மூலவரை தரிசிக்கலாம்.
(During the sahasranAma archana, devotees can see the Lord for 20 minutes.)
6. ஏகாந்த தரிசனம்:
6.EkAnta darisanam:
இரவு 11 மணிக்கு ஏகாந்த சேவை போக ஸ்ரீநிவாஸருக்கு மெத்தை போட்ட படுக்கை இட்டு பால் நெய்வேத்யம் செய்து லாலி கீர்த்தனைகள் பாடி பகவானை உறங்க வைத்து கோயில் கதவை பூட்டுவார்கள்.
(At 11p.m,a bed with pillows is laid for the Lord.Then after doing paal neyvEdhiyam and singing lAli songs,the temple doors are locked.)
7. திருக்கல்யாண உத்ஸவம்:
TirukkalyANa utsavam:
கோயில் முன் மண்டபத்தில் உற்சவருக்கு திருக் கல்யாண உத்ஸவம் நடக்கும். பின் லட்டு, வடை, சித்ரான்னங்கள் ப்ரசாதமாக வழங்கப்படும்.
(In the mantapam in front of the main mantapam,kalyAnOtsavam is done. After that, laddu, chitrAnnam etc are distributed.)
8. ஸஹஸ்ர தீப அலங்காரம்:
8.sahasra deepa alankAram:
பிரதி வெள்ளியன்று மூலவருக்கு திருமஞ்சனம் என்னும் அபிஷேகம் நடக்கும். 1000 விளக்கு
நடுவில் மலையப்பருக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸஹஸ்ர தீப அலங்கார சேவை நடைபெறும்.
(Every Friday,abhishEkam called tirumanjanam is performed for the moolavar. Amidst 1000 lamps,sahasra deepa alankAra sEvai is done for the Lord with BhUdEvi and srIdEvi.)
9. ஊஞ்சல் உத்ஸவம்:
9.Unjal Utsavam:
பெருமாளுக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஊஞ்சல் சேவை நடைபெறும்.
(Unjal sEvai for the Lord,with SridEvi and BhUdEvi is done.)
10. திருப்பதி உண்டியல், திருப்பதி லட்டு பிரசித்தம் பெற்றவை.
10. The Tirupathi Hundi and laddu:
11. அங்க ப்ரதக்ஷிணம்:
11. angapradakshiNam:
அனேக பக்தர்கள் திருப்பதியில் அங்க ப்ரதக்ஷிணம் செய்து வருவார்கள்.
(Many devotees do anga pradakshiNam in the TirumalA temple.)
12. தசாவதார பெருமாள்:
12.dasAvatAra perumAl:
கோவிந்தா என்ற நாமம் பத்து அவதாரங்களையும் குறிக்கிறது. அந்த சப்தத்தை ஆராய்ந்தால் பத்து அவதாரங்களும் அறியலாம்.
(gOvindA refers to all the ten avatArs of the dasAvatAra. We can study in detail about each avatAra on studying the meaning of the term 'gOvindA' carefully). All the 10 avatArs have been incorporated in a single doll,as seen in the picture.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Gayathri - fantastic golu, even better description! Thanks for including the english discourse as well.
Veena
Govinda Govindaaaa....
Well done..as former writer says, Thanks for English version.
Great job. English version is the easy one, I think. Thanks for the tamil version. May be you should add a blog post with the comments from your guest book ;-)
This is malathi, Judge from pudukottai i visited your blog today mam that was a fine golu and your writing too.
friendly
mala
Post a Comment