(As requested by Smt.Sowmya Natarajan)
அழகே முருகா - (அறுபடை வீடு ராகமாலிகா)
இயற்றியவர் - அரு கோபாலன்
பல்லவி:
(ராகம் - அம்ருதவர்ஷினி)
அழகே முருகா குமரா சரணம்
அருளை தரவே இதுவே தருணம்
விலகத் தகுமோ நான் உன் தஞ்சம்
விடாது உன் பாதம் இனி என் நெஞ்சம் (அழகே)
சரணம் 1:
(ராகம் - மோஹனம்)
திருப்பரங்குன்றில் உறையும் அரசே
செந்தமிழ் சங்கம் தங்கும் பரிசே
உறுச்செய்வோர் புகழ் ஓங்கிடும் முரசே
உன் பதம் அல்லால் தாழாதென் சிரசே (அழகே)
சரணம் 2:
(ராகம் - பாகேஸ்ரீ)
அலைவாய் செந்தில் அமரும் பரனே
களைவாய் எந்தன் கவலை உடனே
வலைவாய் பட்டு மீன்போல் தளர்ந்தேன்
விரைவாய் தடுத்தாட் கொள்வதுன் கடனே (அழகே)
சரணம் 3:
(ராகம் - மலயமாருதம்)
ஆவினான்குடி வாழ் கோவெ குஹனே
மேவினேன் உன்னை மயில் வாஹனனெ
தேவி சங்கரி தேடும் மகனே
பாப விமோசனம் தா ஷண்முகனே (அழகே)
சரணம் 4:
(ராகம் - ஸஹானா)
திருவேரகம் ஒளிர் தென்னவர் நிதியே
சிவநார்க்குபதேசம் செய்திடும் பதியே
அறிவார் சித்தர்க்கு உதிக்கும் மதியே
அடியோர்க்கு என்றென்றும் நீதான் கதியே (அழகே)
சரணம் 5:
(ராகம் - காம்போஜி)
குன்றுதோறாடும் மன்றாடி மைந்தா
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் கந்தா
மண்டிடும் நோய் நீக்கி மன நலன் தந்தாள்
மறவாதுன்னையே வழிபடும் வரம் தா (அழகே)
சரணம் 6:
(ராகம் - அம்ருதவர்ஷினி)
பழமுதிர்ச்சோலை திகழும் இறைவா
பைந்தமிழ் நாளும் புகழும் தலைவா
வளமெலாம் தரும் குறிஞ்சி கிழவா
வாழ்வும் ஆள்வும் மீள்வும் தரவா (அழகே)
Tuesday, March 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
awesome! thank u so much..
Thank you!!
I recently bought the Rajarajeswari Anthadi cd from the Nanganallur temple. It is very good.
It will be most helpful if notations are provided ..then we will be able to learn and sing/play the same.....
Regards
Post a Comment